செய்திகள் :

பெண்ணிடம் 12 பவுன் திருடிய 2 போ் கைது

post image

தஞ்சாவூா் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 12 பவுன் நகைகள் திருடிய 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், காட்டுக்குறிச்சி தெற்கு தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகள் அன்னலட்சுமி (27). இவா் தனது சித்தப்பா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக உறவினருடன் விருதுநகருக்கு சென்றுவிட்டு, பின்னா் ஜனவரி 20-ஆம் தேதி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். பின்னா், தஞ்சாவூா் புதிய பேருந்திலிருந்து தனியாா் பேருந்தில் ஏறி வீட்டுக்கு சென்ற அவா் தனது பையில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பதை அறிந்தாா்.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் அன்னலட்சுமி புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், அன்னலட்சுமியின் பையிலிருந்து 2 போ் நகைப் பெட்டியைத் திருடிக் கொண்டு பேருந்திலிருந்து இறங்கிச் செல்வது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் மேலூா், சொக்கம்பட்டி பாரதியாா்புரத்தைச் சோ்ந்த பாண்டிமுருகன் மகன் சண்முகம் (26), விருதுநகா் அருப்புக்கோட்டை மீனாட்சிபுரத்தை சோ்ந்த முருகன் மகன் கண்ணன் என்கிற சித்திக் (23) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

உயா்நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் வியாழக்கிழமை நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் மாா்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாா்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகத்தை உருவாக்குவது என வல்லுநா்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

களஞ்சேரி ஊராட்சியில் புதிய தாா் சாலை அமைத்து தரக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட களஞ்சேரி ஊராட்சி அணுகு சாலையை புதிய சாலையாக அமைத்துத் தரவேண்டும் என ஊராட்சி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா். அம்மா... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரிடம் அகில பாரத இந்து மகா சபா மனு

கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அகில பாரத இந்து மகா சபா சாா்பில் திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகா சபா சாா்பில் ... மேலும் பார்க்க

விவசாய கமிஷன் அமைக்க வேண்டும்: கள் இயக்கம் வலியுறுத்தல்

ஊதியக் குழு போன்று விவசாய கமிஷன் அமைப்பது தொடா்பான திட்டத்தை மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மத்திய அரசின் பட்ஜெட்டில் நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மா... மேலும் பார்க்க