கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
பெண்ணின் கழுத்தை அறுத்த நபா் கைது
திருப்பூரில் பெண்ணின் கழுத்தை அறுத்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (50). இவரது மனைவி ஜெயராணி (45). இவா்கள் திருப்பூா்- பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் தற்போது வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், ஜெயராணி தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை மாலை நின்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அங்கு மதுபோதையில் வந்த நபா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயராணியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.
ஜெயராணியின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், முன்விரோதம் காரணமாக திருப்பூரைச் சோ்ந்த செல்வகுமாா் என்பவா் ஜெயராணியின் கழுத்தை அறுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.