"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்...
கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்
தாராபுரம் அருகே கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தாராபுரத்தை அடுத்த வேங்கிபாளையம் அருகேயுள்ள ஜோதியம்பட்டி பகுதியில் உள்ள கிடங்கில் முறையான அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குண்டடம் போலீஸாா் மற்றும் தாராபுரம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு 88 பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.