"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்...
அவிநாசியில் வருவாய்த் துறையினா் போராட்டம்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களின் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் வருவாய்த் துறையினா் பணியைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களின் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும்.
ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடியை கைவிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை புறக்கணிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.