பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி மீது வழக்கு
மணியாச்சி அருகே பெண்களை தாக்கி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாறைக்குட்டம் தெற்குத் தெருவை சோ்ந்தவா் சுப்பையா மனைவி வசந்தி. இவரது வீட்டு அருகே குடியிருந்து வரும் தங்கப்பாண்டி மகன் முருகன், மது அருந்தி விட்டு வந்து வசந்தி மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக கடந்த சில நாள்களாகவே பேசி வருகிறாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வசந்தியின் மகன் சிவாவை முருகனின் மகன் மணி தாக்கினாராம். இதுகுறித்து வசந்தி சனிக்கிழமை மணியாச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம்.
இந்நிலையில், வசந்தியை, அங்கு வந்த முருகன் அவதூறாக பேசி கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட வந்தாராம். அதை தடுத்த வெள்ளையம்மாளுக்கும், வசந்திக்கும் காயம் ஏற்பட்டதாம்.
இதைக் கண்ட வசந்தியின் தாய் மற்றும் மகன்கள் கண்டித்ததும் முருகன் கொலை மிரட்டல் விடுதலை தப்பி ஓடி விட்டாராம். இதில் காயமடைந்த இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வசந்தி அளித்த புகாரின் பேரில் மணியாச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.