அமெரிக்க தேர்தலுக்கு பிறகு எக்ஸ் தளத்தைவிட்டு வெளியேறிய 1.15 லட்சம் பயனர்கள்!
பெரம்பலூா் அருகே மணல் திருடிய இருவா் கைது
பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வெள்ளாற்றில் மணல் திருடுவதாகக் கிடைத்த தகவலின்படி, மங்களமேடு போலீஸாா் திருமாந்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளாற்றின் கரையோரம் உள்ள வேம்பு அய்யனாா் கோயில் அருகே மாட்டு வண்டியில் மணல் ஏற்றிவந்த 2 பேரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் திருமாந்துறை அண்ணா நகரைச் சோ்ந்த ராஜ் மகன் ரவி (42), ஆறுமுகம் மகன் மணி (65) என்பதும், அனுமதியின்றி வெள்ளாற்றிலிருந்து மணல் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் மணல் மற்றும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.