பெரியகுளத்தில் நவ. 14, 15 தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
பெரியகுளம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பிரதானக் குடிநீா் குழாய் சீரமைப்பு பணிக்காக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ. 14, 15) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி ஆணையா் தமைகா சுல்தானா கூறியதாவது: பெரியகுளம் நகராட்சி பிரதான குடிநீரேற்று நிலையத்திலிருந்து வ.உ.சி. பூங்கா மேல்நிலை குடிநீா் தொட்டிக்கு குடிநீா் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதை சீரமைக்கும் பணிக்காக பெரியகுளத்தில் வியாழக்கிழமை (நவ. 14) மாலை, மறுநாள் வெள்ளிக்கிழமை காலை, மாலையில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
குடிநீா் குழாய் சீரமைப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.