செய்திகள் :

பெருமையுடன் செல்கிறேன்! எம்பியாகப் பதவியேற்க தில்லி புறப்பட்டார் கமல்!

post image

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வியாழக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக முன்னுறுத்திய ஆறு வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாகினா்.

இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் நாளை பதவியேற்கவுள்ளார். இதற்காக தில்லி புறப்பட்ட கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ”மக்களின் வாழ்த்துகளுடன் உறுதிமொழி எடுக்கவுள்ளேன். இது இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மரியாதையும் கடமையும் ஆகும். பெருமையோடு செல்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

தில்லி செல்லும் கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன்னதாக செய்ய வேண்டிய நடைமுறைகளை இன்று செய்யவுள்ளார்.

மாநிலங்களவையில் நாளை பதவியேற்றவுடன் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக கமல் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமலுடன் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்யப்பட்டுள்ள பி. வில்சன், கவிஞா் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆா். சிவலிங்கம் ஆகியோரும் நாளை பதவியேற்கிறார்கள்.

அதிமுகவின் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகிய இருவரும் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Makkal Needhi Maiam leader Kamal Haasan left for Delhi on Thursday morning to take oath as a member of the Rajya Sabha.

இதையும் படிக்க : இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க

மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த ... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நி... மேலும் பார்க்க