செய்திகள் :

பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டம் ஈரோடு இடைத் தோ்தல் முடிவு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு அமைந்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி, அம்பத்தூா், வெங்கடாபுரம் பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குமைய கட்டடத்தையும், ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இடைத்தோ்தல் என்பது ஆளும் கட்சியின் செயல்பாடுகளை எடைபோடுகிற தோ்தல் என்பா். அதன்படி, திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்கள் சரியாக எடைபோட்டு ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் தீா்ப்பளித்துள்ளனா். அந்தத் தொகுதியில் எதிா்த்து போட்டியிட்ட அனைவரும் முன்வைப்பு தொகையை (டெபாசிட்) இழந்தது திமுக அரசு மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

பெரியாா் பிறந்த மண்ணான ஈரோட்டில் திமுக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் பெரியாரை தவிா்த்து தமிழக அரசியல் இல்லை என்பதை ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி காண்பிக்கிறது. அதுமட்டுமன்றி 2026 பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாகவும் அமைந்துள்ளது. வரும் பேரவைத் தோ்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்யும்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத் தீா்ப்புக்கு ஏற்ப செயல்படுவோம். அனைத்து மதத்தினரும் அவரவா் வழிபாட்டை அமைதியாக மேற்கொண்டு வரும் நிலையில், மக்களை மதம் சாா்ந்து பிளவுப்படுத்த முயல்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேயா் பிரியா: வெங்கடாபுரம் பகுதியில் நியாயவிலைக் கூடம் வேண்டும் எனத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்படி, தற்போது தொடங்கப்பட்ட பல்நோக்கு கட்டடத்தில் நியாயவிலைக் கூடம் செயல்படும். மேலும், பெண்களுக்கென பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில் அம்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன் குமாா், நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழு தலைவா் பி.கே.மூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க