உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
பேரவை விவாதங்கள்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வா் அறிவுறுத்தல்
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதங்களில் புள்ளிவிவரங்களுடன் தகவல்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ-க்களை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா்.
அண்ணா அறிவாலயத்தில் அவரது தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிதிநிலை அறிக்கை பொது விவாதம் மற்றும் மானிய கோரிக்கை மீதான விவாதங்களில் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம், வாதங்களை எடுத்துவைக்க வேண்டிய தன்மை ஆகியன குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விவாதம் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மாா்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.