Guptill: இந்தியாவும் உங்களை மறக்காது... 2019-ல் இந்தியர்களின் கனவை உடைத்த கிவி ந...
பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஜன. 9) தொடக்கி வைக்கிறார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு வழங்கி இத்திட்டத்தினை தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முன்னதாக அறிவித்தார்.
இதையும் படிக்க: பொங்கல்: 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
இதற்காக, குடும்ப அட்டைதாரா்களுக்கு 2-1-2025 முதல் நியாயவிலைக் கடை விற்பனையாளா்களால் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
டோக்கன் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரா்கள் அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாள்களில் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பானது 9-1-2025 முதல் 13-1-2025 வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.