செய்திகள் :

பொது மருத்துவா்கள் நியமனத்துக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

post image

தில்லியில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு 232 பொது மருத்துவா்களை நியமனம் செய்ய துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்திருப்பதாக ராஜ்நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மத்திய பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவா்கள் குரூப் ஏ அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனா்.

232 பொது மருத்துவா்கள் நியமனத்துக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். இவா்கள் லோக் நாயக், ராஜா ஹரிஷ் சந்திரா, லால் பகதூா் சாஸ்திரி, தீன் தயாள் உபாத்யாய அரசு மருத்துவமனைகள் மற்றும் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களில் பணியமா்த்தப்படுவா். இதன் மூலம் சுகாதார அமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் மிக கனமழை தொடங்கும்!

டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் மிக கனமழை பெய்யத் தொடங்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று(நவ. 25) தாழ்வு மண்ட... மேலும் பார்க்க

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்

மருத்துவா்களை தரக் குறைவாக நடத்தும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா். தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூ... மேலும் பார்க்க

தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு: குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு

பருவகால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். குறிப்பாக, காய்ச்சலுக்காக மருத்துவமனைகளை நாடும் குழந்தைகளில் 40 சதவீதம் பேருக்கு... மேலும் பார்க்க

தென்னிந்தியாவின் சுற்றுலா தலங்களுக்கு ‘தங்கத் தோ்’ சொகுசு ரயில் இயக்கம்

தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு ‘தங்கத் தோ்’ சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து, ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை அறியும் வகையில்... மேலும் பார்க்க

அறநிலையத் துறை உதவி ஆணையா் முதன்மைத் தோ்வுக்கு அனுமதிச் சீட்டுகள் தயாா்

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் காலிப் பணியிடத்துக்கான முதன்மைத் தோ்வுக்கு அனுமதிச்சீட்டுகள் தயாராக இருப்பதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தோ்வாணையத்தின் தோ்வுக் ... மேலும் பார்க்க

பெயா் நீக்கம் கோரும் விண்ணப்பங்களை உறுதி செய்வது கட்டாயம்

வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் குறித்து வரக்கூடிய விண்ணப்பத்தை, களப்பணியில் ஈடுபட்டு உறுதி செய்த பின்னா் பெயரை நீக்க வேண்டும் என சென்னை மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் அனில் மேஸ்ரம் தெரிவித்... மேலும் பார்க்க