Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்
பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாட்சியில் நடந்த பாலியல் குற்றம் ஒரு பெண் மட்டும் பாதிக்கப்படவில்லை, பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.
இதையும் படிக்க: ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்: திமுக கூட்டணிக் கட்சிகள்!
அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, வழக்கு சிபிஐ-யிடம் சென்ற பிறகுதான் உண்மை வெளியே வந்தது. பாதிக்கப்பட்டவரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதியப்படவில்லை.
பொள்ளாச்சி சம்பவம் அதிமுக பிரமுகர்களால் நடந்ததப்பட்டது என்று சிபிஐ தெளிவாக தெரிவித்தது. ” என்று பேசினார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.