செய்திகள் :

போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு தன்னிகரற்றத் தேர்வு இந்தியா: பிரதமர்

post image

போக்குவரத்துத் துறையில் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியா ஒரு சிறந்த இடமாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாரத மண்டபம், தலைநகரில் உள்ள யசோபூமி மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய மூன்று இடங்களில் இந்தியா வர்த்தக மையம் எனும் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. பாரத மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

ஜனவரி 17 - 22ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் முதல் வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், டையர்கள், எரிபொருள் சேமிப்புத் திறன் உற்பத்தி, ஆட்டோமோட்டிவ் மென்பொருள் நிறுவனங்கள், உதிரிப்பாகங்கள் மறுசுழற்சி என அனைத்தும் நிறுவங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

கண்காட்சியை தொடங்கிவைத்தப் பின்னர் கூட்டத்தில் பேசிய மோடி,

பசுமை தொழில்நுட்பம், மின் வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் ஆகியவற்றின் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

மேக் இன் இந்தியா முன்முயற்சியின் வலிமை, நாட்டின் வாகனத் துறையின் வளர்ச்சி வாய்ப்புகளை எரிபொருளாகக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்திய அவர், பத்தாண்டுகளின் முடிவில் மின்சார வாகனங்களின் விற்பனை எட்டு மடங்கு அதிகரிக்கும்.

பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை ஆதரிக்கக்கூடிய ஒரு இயக்கம் அமைப்பில் அரசு செயல்பட்டு வருவதாகவும், புதை படிவ எரிபொருள்களின் இறக்குமதியில் நாட்டின் செலவைக் குறைக்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் 'மேக் இன் இந்தியா' முயற்சி பெரும் பங்காற்றியுள்ளது. இந்த முயற்சியானது பிஎல்ஐ (உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை) திட்டத்திலிருந்து உந்துதல் பெற்றுள்ளது, இது ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேல் விற்பனைக்கு உதவியது.

இந்த திட்டம் ஆட்டோமொபைல் துறையில் 1.5 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பயணத்தை எளிதாக்குவது இந்தியாவின் முக்கிய முன்னுரிமை.

கடந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலைகளில் பலவழிச்சாலையையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் வாகனத் தொழில் அற்புதமானது மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்தாண்டு 12 சதவீத வருடாந்திர வளர்ச்சியைக் கண்டது, ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது என்றார்.

இத்துறையில் முதலீடு செய்ய கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவித்த மோடி, அதிகரித்து வரும் நடுத்தர வர்க்கம், விரைவான நகரமயமாக்கல், உயர்தர உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மலிவு விலை வாகனங்கள் ஆகியவை ஆட்டோமொபைல் துறையில் வரப்போகின்றன என்று அவர் கூறினார்.

ராகுல் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

வீட்டுப் பணியாளர்களுக்கு 7 வாக்குறுதிகள்.. ஆம் ஆத்மி வெளியீடு!

தில்லி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசு இல்லங்களில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களுக்கு எழு வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. தலைநகரில் பிப்ரவரி 5ல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையி... மேலும் பார்க்க

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு!

திருமண நிகழ்வில் பங்கேற்றபோது குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வாலின் இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனித... மேலும் பார்க்க

யமுனை நதிநீர் விவகாரத்தில் பாஜகவும், ஆம் ஆத்மியும் நாடகம் ஆடுகிறது: பிரமோத் திவாரி

தில்லியைப் பாதிக்கும் முக்கிய பிரச்னைகளைப் புறக்கணிக்கும் அதேவேளையில் யமுனை நதிநீர் தொடர்பான விவகாரத்தில் பாஜகவும், ஆம் ஆத்மியும் நாடகம் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கடுமையாக விமர்சித்து... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் நோய்க்கு 2-வது பலி: 127 உயர்ந்த பாதிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு இரண்டாவது நபர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சிண்ட்ரோம் நோய்த் தொற... மேலும் பார்க்க

கேரளம்: 2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது சிறுவனின் சடலம் கிணற்றில் மிதந்ததையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தின் பலராமபுரத... மேலும் பார்க்க