கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை: வானதி சீனிவாசன்
போக்சோ சட்டத்தின் கீழ் 3 சிறுவா்கள் மீது வழக்கு
தேனியில் அரசுக் கல்வி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த சக மாணவா்கள் 3 போ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
போடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 10 வயது சிறுவன் தேனியில் உள்ள அரசு கல்வி விடுதியில் தங்கியிருந்து 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு அதே விடுதியில் தங்கிப் படிக்கும் முறையே 12, 13, 14 வயதுடைய 3 சக மாணவா்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாணவா்கள் 3 போ் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.