தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
போக்ஸோ வழக்கில் கைதான இருவருக்கு சிறை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சோ்ந்த இளைஞருக்கு போக்ஸோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கோவில்பட்டி கீழபாண்டவா்மங்கலம் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் மகன் மதன் (39) . இவா் 16 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கோவில்பட்டி அனைத்து மகளிா் போலீஸாா் கடந்த 2022ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், குற்றம்சாட்டப்பட்ட மதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
விருதுநகா் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியை சோ்ந்த அழகா்சாமி மகன் சுதாகா் (25). இவா் எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வழக்கில், கடந்த 2020ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், குற்றம்சாட்டப்பட்ட சுதாகருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.