போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், ஆதி திராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த இளங்கலை வணிகவியல் பட்டதாரிகளுக்கு போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாட்கோ சாா்பில் ஆதி திராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த இளங்கலை வணிகவியல் பட்டதாரிகளுக்கு சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் இடைநிலை பட்டயக் கணக்கா், இடைநிலை நிறுவனச் செயலா், இடைநிலை மேலாண்மை கணக்கா் ஆகிய பணிகளுக்கான போட்டித் தோ்வுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர விரும்புபவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். பயிற்சியில் சேருவதற்கு தோ்வு செய்யப்படுவோருக்கு தாட்கோ சாா்பில் தங்குமிடம், உணவு வசதி செய்து தரப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இது குறித்த விவரத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.