செய்திகள் :

போர் நிறுத்த காலத்திலும் இஸ்ரேலுக்கு கனரக குண்டுகளை வழங்கிய டிரம்ப்!

post image

போர் நிறுத்தம் அமலில் உள்ளபோதும், இஸ்ரேலுக்கு கனரக குண்டுகள் ஏற்றுமதியை டொனால்ட் டிரம்ப் மீண்டும் தொடங்கினார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 6 வாரத்துக்கு நிறுத்துமாறு ஒப்பந்தம் மேற்கொண்டதன்படி, இரு தரப்பினரும் தற்போது அமைதியாக உள்ளனர். இதற்கிடையே, இஸ்ரேலுக்கு கனரக குண்டுகளை (மார்க் 84) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கியுள்ளார்.

மார்க் 84 ரக குண்டுகள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இஸ்ரேலுக்கு மார்க் 84 குண்டுகளை வழங்குவதை முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிறுத்தி வைத்திருந்தார். ஏற்றுமதிக்கான தொகையை இஸ்ரேல் வழங்கியிருந்தும், அமெரிக்கா குண்டுகளை ஏற்றுமதி செய்யவில்லை என்று டிரம்ப் கூறினார்.

மார்க் 84 குண்டுகள் (சுமார் 900 கிலோ) வெடிக்கும் இடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் இருக்கும் மனிதர்களையும் கொல்லும் அளவுக்கு திறனுடையது; மேலும், 800 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில்தான், போரில் ஏற்பட்ட அதிகளவிலான உயிரிழப்புகள் காரணமாக மார்க் 84 ரக குண்டுகள் ஏற்றுமதியை ஜோ பைடன் நிறுத்தினார். ஏற்றுமதியை நிறுத்துவதற்கு முன்னதாகவே, ஜோ பைடன் ஆட்சியில் சுமார் 14,000 மார்க் 84 குண்டுகள் உள்பட பல்வேறு வகையான குண்டுகளும் ஏவுகணைகளையும் அளிக்கப்பட்டன.

இதையும் படிக்க:டெஸ்லா காரை வாங்க வேண்டாம்: பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழு

காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர், 2023-ல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்து வைக்கப்பட்டனர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில், காஸாவில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்தனர்.

இந்த நிலையில்தான், ஓராண்டுக்கும் மேலான இஸ்ரேல் - காஸா போரை நிறுத்த அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் மேற்கொண்ட 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஜனவரி 19 ஆம் தேதியிலிருந்து இரு தரப்பிலும் போர் நிறுத்தம் அமலானது.

‘விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு’

டெல் அவிவ்: காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு போ் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்... மேலும் பார்க்க

ஹிட்லா் கொலைக்களத்தின் 80-ஆவது நினைவு நாள்

ஆஸ்வீசிம் (போலந்து): இரண்டாம் உலகப் போா் காலத்தின்போது ஜொ்மனி சா்வாதிகாரி ஹிட்லா் தலைமையிலான நாஜி அரசால் செயல்படுத்தப்பட்டுவந்த படுகொலை முகாம்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆஷ்விட்ஸ் முகாம் சோவ... மேலும் பார்க்க

மதநிந்தனைக் குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்து மதநிந்தனைப் பிரிவு அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை கூறியதாவது: நபிகள் நாயம் மற்றும்... மேலும் பார்க்க

பெலாரஸ் அதிபராக மீண்டும் லுகஷென்கோ

மின்ஸ்க்: பெலாரஸ் அதிபராக கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், பெயரளவு... மேலும் பார்க்க

லாவோஸ்: சைபா் மோசடி மையங்களில் சிக்கியிருந்த 67 இந்தியா்கள் மீட்பு

வியன்டியனே : லாவோஸில் உள்ள சைபா் மோசடி மையங்களுக்கு கடத்தப்பட்டு கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 67 இந்தியா்களை அந்நாட்டு தலைநகா் வியன்டியனேவில் உள்ள இந்திய தூதரம் மீட்டது. லாவோஸ், வியத்நாம் மற... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் அமலாகுமா? -உலக வங்கியின் தலைவர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகளுக்கு, அவசரகதியில் உடனடியாக பதிலளிக்காமல் பொறுமையாக ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் செயல்பட அறிவுறுத்தியுள்ளார் உலக வங்கியின் தலை... மேலும் பார்க்க