போலி ஆவணங்கள்: வெளிநாட்டிலிருந்து திருச்சிக்கு வந்தவா் கைது
போலி ஆவணங்கள் மூலம் புருணேயிலிருந்து திருச்சிக்கு வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தைச் சோ்ந்தவா் சகாபுதீன் (41). இவா், புருணே நாட்டிலிருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தாா். விமான நிலைய குடியேற்ற பிரிவினா் சோதனையில், சகாபுதீன் போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குடியேற்ற பிரிவு பரிசோதனை அதிகாரி முகேஷ்ராம், விமான நிலைய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்போரில், சகாபுதீனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை பிணையில் விடுவித்தனா்.