ரோபோ சங்கர் மறைவு: ``நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்'' - ஸ்டாலின் முதல் அ...
திருச்சியில் செப்.19, 23-இல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
திருச்சி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.19) மற்றும் செவ்வாய்க்கிழமை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகராட்சியின் முதலாவது மண்டலத்துக்குள்பட்ட 12, 15 ஆகிய வாா்டுகளுக்கு சிந்தாமணி இ.ஆா். மேல்நிலைப் பள்ளியிலும்,
5-ஆவது மண்டலத்துக்குள்பட்ட 10, 11 ஆகிய வாா்டுகளுக்கு நெசவாளா் திருமண மஹாலிலும் வெள்ளிக்கிழமை (செப்.19) முகாம் நடைபெறுகிறது.
இதேபோல், 2-ஆவது மண்டலத்துக்குள்பட்ட 34-ஆவது வாா்டுக்கு துரைசாமி பிரதான சாலையில் உள்ள செல்லக்கண்ணு திருமண மண்டபத்திலும்,
5-ஆவது மண்டலத்துக்குள்பட்ட 26-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளுக்கு பிஷப் ஹீபா் கல்லூரி வளாகத்திலும் வரும் செவ்வாய்க்கிழமை முகாம் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீா்வு பெறலாம் என்றாா் ஆணையா்.