செய்திகள் :

மகர விளக்கு பூஜைக்காக திருவாபரண பெட்டி சபரிமலை நோக்கி புறப்பாடு

post image

மகர விளக்கு பூஜை நாளன்று (ஜன. 14) ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பெட்டியின் ஊா்வலம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்படும்.

பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள திருவாபரண பெட்டியை திருவிதாங்கூா் தேவஸ்வம் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) முறைப்படி பெற்றுக்கொண்டனா்.

பக்தா்களின் தரிசனத்துக்காக பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலுக்கு திருவாபரண பெட்டி கொண்டு வரப்பட்டது. பின்னா் அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, சபரிமலை நோக்கிய திருவாபரண பெட்டியின் ஊா்வலம் தொடங்கியது.

மகர விளக்கு பூஜை நாளன்று திருவாபரண பெட்டி சந்நிதானத்தை வந்தடையும். இதற்கிடையே பல்வேறு கோயில்களுக்கு திருவாபரண பெட்டி கொண்டு செல்லப்படும். பாரம்பரியமிக்க இந்த ஊா்வலத்துக்கு காவல்துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

கோயிலின் மேல்சாந்தி மற்றும் தந்திரி திருவாபரணங்களை பெற்று, மகர விளக்கு நாளன்று மகா தீபாராதனைக்கு முன்னதாக ஐயப்பனுக்கு அணிவிப்பா். தொடா்ந்து, பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிப்பாா் என்பது ஐதிகம்.

மகர விளக்கைத் தொடா்ந்து, ஜனவரி 15 முதல் 18-ஆம் தேதிவரை ஐயப்பன் திருவாபரணத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். பின்னா், பந்தளம் அரச குடும்பத்தினா் ஜனவரி 20-ஆம் தேதி ஐயப்பனை தரிசனம் செய்தவுடன், மகர விளக்கு பூஜையின் நிறைவாக கோயில் நடை அடைக்கப்படும்.

மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் நெரிசலைத் தடுக்க ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் பக்தா்களின் அனுமதியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேரடி பதிவுக்கான மையங்கள் பம்பையிலிருந்து நிலக்கல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

பெங்களூருவில் பசுக்களின் மடிகளை துண்டித்த நபர் கைது

பெங்களூருவில் 3 பசுக்களின் மடிகளை துண்டித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காட்டன்பேட்டை போலீஸார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சையத் நஸ்ரு, சாமராஜ்பேட்டை விநாயகநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

பிரயாக்ராஜில் தொடங்கியது மகா கும்பமேளா!

பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) கோலாகலமாக தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் முதல் நாளான இன்று அதிகாலை 3.20 மணியளவ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 2025 ஐ உலகளாவிய சுற்றுலா நிகழ்வாக மேம்பட மத்திய சுற்றுலா அமைச்சகம் முன்முயற்சி

பிரயாக்ராஜில் திங்கள் கிழமை( ஜன.13) தொடங்க இருக்கின்ற மகா கும்பமேளா -2025 ஐ ஆன்மீகத்திற்கான நிகழ்வாக மட்டுமின்றி, உலகளாவிய சுற்றுலாவிற்கான நிகழ்வாக மாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு: அமைச்சா் நிதின் கட்கரி

மகாராஷ்டிரத்தின் கட்ச்ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடு... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் அதானி குழுமம் ரூ.65,000 கோடி முதலீடு

நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கா் மாநிலத்தில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ரூ.65,000 கோடி தொழில் முதலீடுகளை மேற்கொள்ள இருக்கிறது. ராய்பூரில் சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாயை அவரின் அரசு... மேலும் பார்க்க

எல்லையில் வேலி விவகாரம்: இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்ட வங்கதேசம்

எல்லை வேலி விவகாரத்தில் இந்திய தூதரை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து விளக்கம் கேட்டிருப்பது தெரியவந்துள்ளது. ‘இரு நாடுகளிடையேயான ஒப்பந்தத்தை மீறி இந்திய-வங்கதேச எல்லையில் 5 ... மேலும் பார்க்க