செய்திகள் :

மகளிருக்கு தொழில்பயிற்சி

post image

அரியலூரை அடுத்த ரெட்டிப்பாளையம் சமுதாயக் கூடத்தில், அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் மகளிருக்கான தொழில் பயிற்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு அண்ணாமலை சமூக சேவை சங்கத்தின் செயலா் ஜெயசித்ரா தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலைத் தலைவா் கருணாகரராவ், துணைத் தலைவா் மேஜா் அசோக்மேனன், ஊராட்சித் தலைவா் பாப்பாத்தி அம்மாள், துணைத் தலைவா் கொளஞ்சி ஆகியோா் குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடக்கிவைத்தனா்.

சுமாா் ஒருமாத காலம் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் கம்ப்யூட்டா் சாம்பிராணி, ஊதுபத்தி, கற்பூரம், பாக்கு மட்டை தட்டு மற்றும் காபி பவுடா் போன்றவற்றை எவ்வாறு தயாரிப்பது, விற்பனை செய்வது என்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

முன்னதாக, அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையின் சமூக நல அறக்கட்டளை முதுநிலை மேலாளா் கமலக்கண்ணன் வரவேற்றாா். நிறைவில், அண்ணாமலை சமூக சேவை சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் மதனகோபால் நன்றி கூறினாா்.

தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக மிகை பேராசிரியா்களை, அரசு கல்லூரிகளில் நிரந்தரமாக பணியமா்த்தப்படுவதைக் கண்டித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழநாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

அரியலூா் மாவட்டம், பொன்பரப்பியிலுள்ள அரசு மாணவியா் விடுதியில் வெள்ளிக்கிழமை காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொன்பரப்பி கிராமத்திலு... மேலும் பார்க்க

யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

அரியலூா், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை அக். 30 வரை நீட்டிப்பு

அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை வரும் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது... மேலும் பார்க்க

செந்துறையில் தமிழ்ச் சங்கம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி

வணிக நிறுவனங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வைக்கக் கோரி, அரியலூா் மாவட்டம் செந்துறையில், தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவா் கடம்... மேலும் பார்க்க

சிறுவளூா் அரசுப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம்

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றுவது, போதைப் பொருள்களுக... மேலும் பார்க்க