செய்திகள் :

மகாராஷ்டிரா தேர்தல்: ``போலீஸ் வாகனத்தில் பண பட்டுவாடா" - சரத்பவார் குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்

post image

மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இத்தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் கடைசி வரை மல்லுக்கட்டிக்கொண்டிருந்தன.

தற்போது கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தி வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்திருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வேட்பு மனுவை திரும்ப பெற அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தலைவர் சரத்பவார் தனது சொந்த ஊரான பாராமதியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு தேவையான பணம் போலீஸ் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தேவேந்திர பட்னாவிஸ்

இது குறித்து அதிக அளவில் வெளிப்படையாக பேச விரும்புகிறேன். ஆனால் மேற்கொண்டு பேசினால் இது தொடர்பாக தகவல் கொடுத்த அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அது குறித்து பேசவிரும்பவில்லை'' என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது இது போன்று செய்திருக்கவேண்டும். எனவேதான் சரத்பவார் இது போல் பேசி அவரது சுயரூபத்தை காட்டுகிறார்.

தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மும்பையில் கோபால் ஷெட்டி பா.ஜ.க மூத்த தலைவர். அவர் போரிவலி தொகுதியில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து தாக்கல் செய்திருக்கும் மனுவை திரும்ப பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

பாராமதி தொகுதியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பாக அஜித்பவாரின் சகோதரர் மகன் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். எனவே சரத்பவார் பாராமதி தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பாராமதியில் இரண்டாவது முறையாக பவார் குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மகாராஷ்டிரா தேர்தல்: விலாஸ்ராவ் தேஷ்முக் வாரிசுகள் தந்தையின் கோட்டையை பிடிப்பார்களா..?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஏராளமான அரசியல் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடுகின்றனர். உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே மகன்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதுதவிர உறவுகளே ஒருவரை எதிர்த்து ஒருவர் ... மேலும் பார்க்க

RN Ravi: "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" - சூரசம்ஹார நிகழ்வுக்கு ஆளுநர் மாளிகை வாழ்த்து

முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமாகவும், இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பானது. ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக வளர்ந்து ஆட்சியை பிடித்தது எப்படி..? இதுவரை நடந்த தேர்தல்கள் ஒரு பார்வை..!

மகாராஷ்டிரா அரசியல் களம்மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாட்டின் பொருளாதார தலைநகரமாக மும்பை இருப்பதாலும், நாட்டின் வளர்ச்சியில் மகாராஷ்டிரா முக்கிய பங்கு வகிப்பதாலும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. கட்சியை எதிர்த்து 150 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

கடைசி நேரத்தில் குவிந்த மனுத்தாக்கல்...மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றோடு முடிவுக்கு வந்தது. கடைசி நாளான நேற்று அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் தீவிரம் காட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: ராஜ்தாக்கரே மகன் போட்டி... வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் கட்சிகள் தீவிரம்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே பா.ஜ.க 99 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் முதல்வர... மேலும் பார்க்க