செய்திகள் :

RN Ravi: "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" - சூரசம்ஹார நிகழ்வுக்கு ஆளுநர் மாளிகை வாழ்த்து

post image

முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமாகவும், இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பானது. 6 நாள்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 2ஆம் தேதி தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 7) மாலையில் கடற்கரை பகுதியில் நடைபெறவிருக்கிறது. இதனைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் அங்குக் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில், சூரசம்ஹார வைபவத்துக்குத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்திருக்கிறது.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, "சூரசம்ஹார வைபவத்தில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாளில் முருகப்பெருமான் நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் அளவற்ற மகிழ்ச்சியைப் பெருக்கி, அறியாமையின் நிழலிலிருந்து வெளிவரும் துணிச்சல், வலிமை, ஞானம் ஆகியவற்றை வழங்கி, நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் பீடித்துள்ள தீய சக்திகளை வீழ்த்தி, தர்மத்தையும் நியாயத்தையும் உறுதிப்படுத்த அருள்புரிவாராக. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என்று ட்வீட் செய்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மகாராஷ்டிரா தேர்தல்: விலாஸ்ராவ் தேஷ்முக் வாரிசுகள் தந்தையின் கோட்டையை பிடிப்பார்களா..?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஏராளமான அரசியல் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடுகின்றனர். உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே மகன்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதுதவிர உறவுகளே ஒருவரை எதிர்த்து ஒருவர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக வளர்ந்து ஆட்சியை பிடித்தது எப்படி..? இதுவரை நடந்த தேர்தல்கள் ஒரு பார்வை..!

மகாராஷ்டிரா அரசியல் களம்மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாட்டின் பொருளாதார தலைநகரமாக மும்பை இருப்பதாலும், நாட்டின் வளர்ச்சியில் மகாராஷ்டிரா முக்கிய பங்கு வகிப்பதாலும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: ``போலீஸ் வாகனத்தில் பண பட்டுவாடா" - சரத்பவார் குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்

மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இத்தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. கட்சியை எதிர்த்து 150 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

கடைசி நேரத்தில் குவிந்த மனுத்தாக்கல்...மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றோடு முடிவுக்கு வந்தது. கடைசி நாளான நேற்று அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் தீவிரம் காட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: ராஜ்தாக்கரே மகன் போட்டி... வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் கட்சிகள் தீவிரம்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே பா.ஜ.க 99 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் முதல்வர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் முந்தும் எதிர்க்கட்சிகள்; சிக்கலில் 28 தொகுதிகள்

மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஆளும் மஹாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடர்ந்து பேச்சுவார... மேலும் பார்க்க