செய்திகள் :

மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து!

post image

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி கடந்த வாரம் (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் 6 ஆம் நாளான இன்று திரளான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் கும்பமேளா நடைபெறும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மகா கும்பமேளா: புனித நீராடிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்த நிகழ்வுக்காக அமைக்கப்பட்டக் கூடாரங்களில் பிடித்த தீ பல இடங்களில் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. தீ விபத்தால் கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ பரவுவதாக தகவல் கிடைத்ததுவுடன் பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகை அங்கு பெரியளவில் பரவி புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. செக்டார் 19 பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருகில் உள்ள கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதுவரை 12 கூடாரங்கள் எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.  

கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து வருவதால் தீ வேகமாகப் பரவுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைக்க முயற்சித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்தில் யாரேனும் காயமடைந்தார்களா போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ஜம்மு - காஷ்மீரில் தொடரும் மர்ம மரணங்கள்... காரணம் என்ன?

ஜம்மு - காஷ்மீரில் மர்மக் காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியாகி வருவதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரகத்தின் உயர்மட்டக் குழு இன்று ஆய்வு செய்ய விரைந்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள பூதல... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கு: குற்றவாளி வங்கதேசத்தவர் இல்லை... வழக்கறிஞர் தகவல்!

நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளி வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் மும்பைவாசி என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரஷிய ராணுவத்திற்கு ஆட்களை அனுப்பிய கும்பல் கைது!

கேரளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரஷிய ராணுவத்திற்கு ஆள்களை அனுப்பும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கேரளத்தில் பினில், அவரது உறவினர் ஜெயின் குரியன் ஆகியோரை கடந்தாண்டு ஏப்ரலில் பி... மேலும் பார்க்க

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட 121 விவசாயிகள்!

ஜக்ஜித் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட பல்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மனு பாக்கரின் குடும்பத்தார் இருவர் பலி!

ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழிப் பாட்டியும் மாமாவும் சென்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர்.ஹரியாணாவில் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவியும்,... மேலும் பார்க்க

பிகார்: கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலி, 4 பேர் மாயம்

பிகாரில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம், கதிஹர் மாவட்டத்தில் 17 பேருடன் கங்கையில் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே ஞாயிற்... மேலும் பார்க்க