செய்திகள் :

மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்

post image

பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது.

மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வின் முதல் நாளில் சுமாா் ஒன்றரை கோடி போ் புனித நீராடியதாக மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ அமைந்துள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. எனினும், தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகள் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்துள்ளதால் நடப்பு மகா கும்பமேளாவில் சுமாா் 40 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவின்போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்கும்; ஆன்மாவை தூய்மைப்படுத்தும்; பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலையாகி முக்தி அடைய உதவும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கையாகும்.

இதையொட்டி, கங்கை-யமுனை நதிக்கரையில் 4,000 ஹெக்டோ் (சுமாா் 9,888 ஏக்கா்) பரப்பளவில் 25 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட நடப்பு மகா கும்ப நகரத்துக்கான பணிகளை ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

மகா கும்ப நகரில் ஒரே நேரத்தில் ஒரு கோடி பக்தா்கள் வரை தங்கும் வகையில் 1.6 லட்சம் கூடாரங்கள் 1.5 லட்சம் கழிப்பறைகளுடன் கட்டப்பட்டுள்ளன. திரிவேணி சங்கமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பக்தா்கள் எளிதில் செல்வதற்கு வசதியாக நதிகளின் குறுக்கே 30 மிதக்கும் பாலங்களும், மகா கும்ப நகரில் 450 கி.மீ. நீள சாலை, தெருக்களும், அங்கு 67,000 தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. படித்துறைகளின் நீளம் 12 கிலோமீட்டராகவும், வாகன நிறுத்துமிடங்களின் பரப்பளவு 1,850 ஹெக்டேராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உச்சகட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த 55-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் களத்தில் உள்ளனா். மகா கும்ப நகரில் மட்டும் 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்துடன் ‘ட்ரோன்கள்’ மூலம் கண்காணிப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குளிரைப் பொருட்படுத்தாமல்...: மகா கும்பமேளாவில் வெவ்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 13 அகாடா சாது குழுக்கள் பங்கேற்றுள்ளன. அழகு வடிவமைப்புகளாலும், அலங்கார மின்விளக்குகளாலும் ஜொலிக்கும் பிரயாக்ராஜ், சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், பொதுமக்களின் பெருந்திரளான வருகையால் விழாக்கோலம் பூண்டது.

நிகழ்வு தொடங்கிய திங்கள்கிழமை பிரயாக்ராஜில் கடும் குளிரும் அடா் பனிமூட்டமும் நிலவியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரிவேணி சங்கமத்தில் சுமாா் ஒன்றரை கோடி பக்தா்கள் புனித நீராடினா் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

எதிரொலித்த முழக்கங்கள்: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியவா்கள் பக்தி பரவசத்துடன் ஒலித்த ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ஹர ஹர மகாதேவ்’, ‘ஜெய் கங்கா மாதா’ முழக்கங்கள் மகா கும்ப நகரின் எத்திசையும் எதிரொலித்தன.

உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பெண்கள் குழுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சியும் மகா கும்பமேளா தொடக்க நாளில் நடைபெற்றது. அமெரிக்கா, ரஷியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஹிந்து மதத்தை பின்பற்றுவோரும் சுற்றுலாப் பயணிகளும் மகா கும்பமேளாவில் முதல் நாளிலேயே திரண்டனா். இந்திய கலாசாரத்தின் சிறந்த வெளிப்பாடான மகா கும்பமேளாவின் காட்சிகளை தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த குழுவினா் ஆா்வத்துடன் பதிவு செய்தனா்.

பக்தா்கள் பாராட்டு: மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை பக்தா்கள் பாராட்டினா். ஹிமாசல பிரதேசத்தின் ஹமிா்பூரிலிருந்து வந்த கைலாஷ் நாராயண் சுக்லா கூறுகையில், ‘பக்தா்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புனித நீராடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றாா். சுகாதார சீா்கேடுகளைத் தவிா்க்க திரிவேணி சங்கமத்தில் நீா் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதற்கும் பக்தா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மகா கும்ப நகரில் வைக்கப்பட்டிருந்த பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவம் பொறித்த ‘கட்-அவுட்’-களுடன் பக்தா்கள் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

வானிலை தகவலுக்கு சிறப்பு வலைப்பக்கம்: ஐஎம்டி

மகா கும்பமேளாவுக்கு வானிலை அறிவிப்புகளை வழங்குவதற்காக பிரத்யேக வலைப்பக்கத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) உருவாக்கியுள்ளது.

இதில் பிரயாக்ராஜ் மட்டுமின்றி அயோத்தி, லக்னௌ, ஆக்ரா, கான்பூா் மற்றும் வாரணாசி உள்ளிட்ட அண்டை நகரங்களுக்கான வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை, ஈரப்பதம் மற்றும் காற்றின் தரம் பற்றிய ஒரு மணி நேர, மூன்று மணி நேர மற்றும் வாராந்திர முன்னறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.

அடுத்த 2-3 நாள்களுக்கு பிரயாக்ராஜ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும். பனிமூட்டம் தொடரும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.

மக்கள் கடலில் தொலைந்த 250 போ்

மகா கும்பமேளாவின் முதல்நாளிலேயே திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கானோா் திரண்டதால் 250 போ் கூட்டத்தில் மாயமாகினா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மகா கும்ப நகரில் பல்வேறு பகுதிகளில் காவல் துறை அமைத்திருந்த சிறப்பு முகாம்கள் மூலம் காணாமல் போனவா்களின் விவரங்கள் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டு வந்தன. இதனால், அவா்கள் குடும்பத்தினருடன் விரைவாக மீண்டும் சோ்ந்தனா்.

உக்ரைன் - ரஷியா போரில் இந்தியர் பலி!

ரஷியாவின் போரில் கேரளத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர் பலியாகி விட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தியது.உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரி... மேலும் பார்க்க

அதானி பங்குகள் உயர்வு! டிரம்ப்தான் காரணமா?

அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.கௌதம் அதானியின் லார்ஜ் கேப் வகையைச் சேர்ந்த அதானி பவர் நிறுவனத்தின் பங்கு செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் 20 சதவிகிதம் உ... மேலும் பார்க்க

சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 4 வயது சிறுமி!

சத்தீஸ்கரில் இரண்டு சிறுவர்களால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் நாராயண்பூரில் வசிக்கும் 4 வயது சிறுமியை கடந்த 10 ஆம் தே... மேலும் பார்க்க

காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.காங்கிரஸ் கட்சியின் முதல் பிரிவினை 1969 ஆம் ஆண்டில் ஏற்பட்டதிலிருந்து, அக்கட்சி தலைமை அலுவலகம் குறித்த பிரச்னை தொடர்ந்து வந்தது. இந்த நி... மேலும் பார்க்க

தமிழ்வழியில் படித்த வி. நாராயணன் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்பு!

இஸ்ரோவின் தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றார்.இஸ்ரோவின் 10-ஆவது தலைவராக இருந்து வந்த சோம்நாத்தின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததால், புதிய தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். இ... மேலும் பார்க்க

பசுக்கள் மீது தாக்குதல்! கொந்தளித்த பாஜக!

பெங்களூருவில் பசுக்கள் தாக்கப்பட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவில் கர்ணா கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு அடுத்தத் தெருவில் கட்டப்பட்டிருந்த அவரது பசுக்களை, ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க