செய்திகள் :

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

post image

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்ட நிலையில், புதன்கிழமை(ஏப். 2) நள்ளிரவில் வாக்கெடுப்பும் நடைபெற்றது.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளை புதன்கிழமை பதிவு செய்தனர்.

இந்தநிலையில், வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகள்; எதிர்த்து 232 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரம்: கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டா்: 7 பெண் தொழிலாளா்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட் மாவட்டத்தில் 90 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்த விபத்தில், விவசாய பெண் தொழிலாளா்கள் 7 போ் உயிரிழந்தனா். 3 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இது தொடா்பாக அரசு அதிகா... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக போராடுவதாக கருத்து: மே 7-க்குள் ராகுல் பதிலளிக்க சம்பல் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவதாக தெரிவித்த கருத்து குறித்து மே 7-க்குள் பதிலளிக்குமாறு மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: மாநிலங்களவையில் ஆதரவு 128 - எதிா்ப்பு 95

மாநிலங்களவையில் 13 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற விவாதத்துக்கு பின்னா், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகள... மேலும் பார்க்க

வங்கதேச ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: முகமது யூனுஸிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இ... மேலும் பார்க்க

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய... மேலும் பார்க்க