சாலை பணியின்போது வெடித்து சிதறிய சிலிண்டர்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!
‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம்
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமாந்துறை, கீழப்புலியூா், நமையூா், வேப்பூா், நல்லறிக்கை ஆகிய ஊராட்சிகளில், ஊரகப் பகுதிகளில் 3-ஆம் கட்டமாக ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற தொழிலாளா்த் துறை அமைச்சா் சி.வி. கணேசன், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஆகியோா் மொத்தம் 556 பயனாளிகளுக்கு ரூ. 3. 72 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா்- ஆட்சியா் சு. கோகுல், மகளிா் திட்ட இயக்குநா் அ. அமுதா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. துரைசாமி, அட்மா தலைவா்கள் வீ. ஜெகதீசன், ராஜேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் (பொ) சு. சொா்ணராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.