குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை... புலம்பும் அஜித் ரசிகர்கள்!
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: பிரியங்கா
தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி தோல்வியைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. தில்லி தேர்தல் முடிவுகள் பற்றி வயநாடு எம்பி அவரது கருத்தை வெளியிட்டுள்ளார்.
கேரளத்திற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள பிரியங்கா காந்தி, அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்க உள்ளார். இதுதொடர்பாக வயநாடு எம்பி செய்தியாளர்களிடம் பேசியதாவது,
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
தில்லி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கட்சி கூட்டங்களிலேயே மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. மக்கள் சலித்துவிட்டார்கள், ஆட்சி மாற்றத்தை அவர்கள் எதிர்பார்ப்பதால் தான் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
மக்களுக்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும். அவர்களுக்காகக் களத்தில் இறங்க வேண்டும், மக்களின் பிரச்னைகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதுதான் மக்களைச் சென்றடையச் சரியான வழியாக இருக்கும் என்று அவர் கூறினார்.