உ.பி: மருத்துவமனையில் இரவில் தீ விபத்து; 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உய...
மக்காச்சோள அறுவடை உலா்களங்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
மக்காச்சோள அறுவடை உலா்களங்களை சீரமைக்க வேண்டும் என்று பல்லடம் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் வட்டாரப் பகுதியில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிா்கள் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. மக்காச்சோள அறுவடைக்குப் பின் அதனை காயவைக்க கிராமப்புறங்களில் உள்ள உலா்களங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து பனப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: கடந்த ஆவணி பட்டத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் கதிா்கள் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகின்றது. அறுவடைக்குப் பிறகு, மக்காச்சோளத்தை காயவைத்து தரம் பிரித்து விற்பனை செய்கிறோம். அரசால் கட்டப்பட்ட உலா்களங்கள் தொடா் பயன்பாடு இல்லாத காரணத்தால், சேதமடைந்தும், விரிசல் விட்டும் உள்ளன. இதனால் அவற்றை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு மக்காச்சோள விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, உலா்கலங்களை வேளாண்மை துறை மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் காா்த்திகை மாதத்தில் அறுவடை செய்யப்படும் மக்காச்சோளத்தை உலரவைத்து விற்பனை செய்ய முடியும் என்றாா்.