உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷியா தாக்குதல்! 18 பேர் பலி!
மணிப்பூரில் அதிகரிக்கும் ரேபிஸ் பாதிப்பு! கட்டுப்பாடுகள் விதிப்பு!
மணிப்பூரின் சூரசந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமத்தில் அதிகரித்து வரும் ரேபிஸ் நோய் பாதிப்பினால் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் நியூ ஸோவெங் கிராமத்தில் ரேபிஸ் நோய் தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருவதினால் அங்குள்ள மக்களும் விலங்குகளும் கடுமையான பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நோயைத் தடுக்க அந்தக் கிராமம், கட்டுப்பாடுள்ள மண்டலமாக அறிவிக்கப்பட்டு, நாய்கள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளின் விற்பனை மற்றும் அவற்றை கிராமத்தை விட்டு வெளியே கொண்டுச் செல்வதற்கும் உள்ளே கொண்டு வருவதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட குற்றவியல் நீதிபதியின் உத்தரவின்படி அந்த கிராமத்திலுள்ள அனைத்து தெரு மற்றும் வளர்ப்பு நாய்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நியூ ஸோவெங் கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட கண்காணிப்புகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு முதல்வர் பரிசு!