செய்திகள் :

மணிப்பூரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: அமித் ஷா!

post image

மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2023 மே முதல் இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், வடகிழக்கு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மறுஆய்வு செய்தார். அப்போது சாலைகளில் இடையூறுகளை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விரிவான விளக்கவுரை வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஆளுநர் அஜய் குமார் பல்லா, மணிப்பூர் அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம், துணை ராணுவப் படைகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மணிப்பூரின் முதல்வராக இருந்த என்.பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிப்ரவரி 13ல் அமல்படுத்தப்பட்டது.

சட்டவிரோத மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்கும் அனைவரும் சரணடையுமாறு ஆளுநர் பிப்.20 அன்று இறுதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளத்தாக்கு மாவட்டங்களில் கடந்த 7 நாளில் 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் பொதுமக்கள் சரணடைந்துள்ளனர். இதில் மெய்தி தீவிரவாதக் குழுவான அரம்பாய் தெங்கோல் சரணடைந்த 246 துப்பாக்கிகளும் அடங்கும்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை அரசிடம் சமர்ப்பிக்க மக்கள் கூடுதல் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, மார்ச் 6ஆம் தேதி மாலை 4 மணி வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் வெள்ளிக்கிழமை கூறினார்.

சூட்கேஸில் காங்கிரஸ் தொண்டரின் சடலம் கண்டெடுப்பு!

ஹரியாணாவில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது காங்கிரஸ் தொண்டர் என தெரிய வந்துள்ளது. ஹரியாணாவின் ரோடாக் மாவட்டத்தில் இன்று சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில்... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!

பஞ்சாபில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 290 பேர் கைது செய்யப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை மூன்று மாத காலத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றவ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

மத்தியப் பிரதேசத்தில் புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றி, தனது உயிரை வளர்ப்பு நாய் ஒன்று தியாகம் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே ச... மேலும் பார்க்க

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவிகிதம் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காய... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி

செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்... மேலும் பார்க்க