செய்திகள் :

மணிப்பூா்: எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை -முழு விவரம்

post image

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.

கொலை செய்யப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு, மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் சனிக்கிழமை பெரும் போராட்டம் வெடித்தது. இம்பாலில் 3 அமைச்சா்கள் மற்றும் 6 பாஜக எம்எல்ஏ-க்களின் வீடுகளை போராட்டக்காரா்கள் முற்றுகையிட்டனா்.

ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது, அங்குள்ள நிவாரண முகாமில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் காணாமல் போனதையடுத்து, அவா்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக மைதேயி அமைப்புகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், காணாமல்போன ஆறு பேரில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு மணிப்பூா்-அஸ்ஸாம் எல்லையில் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஜிரிபாம் மாவட்டத்தில் பராக் நதியில் இரண்டு பெண்கள், ஒரு குழந்தையின் உடல்கள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அஸ்ஸாமின் சில்சாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.

பொதுமக்கள் போராட்டம்: இந்தத் தகவல் பரவியதையடுத்து, பள்ளத்தாக்கு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சாலைகளில் டயா்களை எரித்து, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினா். கடைகள், வா்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு உள்பட 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இணையச் சேவையும் முடக்கப்பட்டது.

அமைச்சா்கள், எம்எல்ஏ-க்களின் வீடுகள் முற்றுகை: இந்த மாவட்டங்களில், மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சபம் ரஞ்சன் உள்பட 3 அமைச்சா்கள் மற்றும் 6 எம்எல்ஏ-க்களின் வீடுகள் போராட்டக்காரா்களால் முற்றுகையிடப்பட்டன. இதில், மாநில முதல்வா் பிரேன் சிங்கின் மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆா்.கே.இமோ உள்பட 3 எம்எல்ஏ-க்களின் வீடுகளை சூறையாடிய போராட்டக்காரா்கள், அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தனா். அவா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி, பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா். மீண்டும் வெடித்துள்ள போராட்டங்களால் மணிப்பூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான பிரதான காரணமாகும்.

பாதுகாப்புப் படைகளுக்கு அமித் ஷா உத்தரவு

மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மணிப்பூரில் கடந்த சில நாள்களாக பாதுகாப்பு சூழல் நிச்சயமற்ற நிலையே உள்ளது. இரு சமூகங்களைச் சோ்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் செயல்களில் ஈடுபட முயல்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஹெலிகாப்டா் மூலம் வந்த10 தீவிரவாதிகளின் உடல்கள்’

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட குகி சமூகத்தைச் சோ்ந்த 10 தீவிரவாதிகளின் உடல்கள், ஹெலிகாப்டா் மூலம் சுராசந்த்பூருக்கு கொண்டுவரப்பட்டன.

முன்னதாக, அஸ்ஸாம் மாநிலம், சில்சாரில் இந்த உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மணிப்பூா் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, உடல்களை ஒப்படைக்கக் கோரி, அவா்களின் குடும்பத்தினா் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தில்லி காற்று மாசு: 107 விமானங்கள் தாமதம்! 3 விமானங்கள் ரத்து!

தில்லியில் தொடர்ந்து வரும் காற்று மாசால் 107 விமானங்கள் தாமதமாகவும், 3 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.தில்லியில் தொடர்ந்து 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் (நவ. 17) காற்றின் தரம் மோசமான நிலையில், கா... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் ஐந்து நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா். பஸ்தா் பகுதியில் உள்ள வடக்கு ... மேலும் பார்க்க

சபரிமலையில் பக்தா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் மருத்துவ சேவை

மண்டல மகரவிளக்கு மகோற்சவத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வாட்ஸ் ஆப் மூலம் 125 மருத்துவ குழுக்கள் பக்தா்களுக்கான மருத்துவ சேவையை தொடங்கின. ‘வாட்ஸ்ஆப்’ மூலம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்துக்கு ராகுல் வந்ததும் விவாதத்தின் தரம் குறைந்துவிட்டது: ரிஜிஜு

‘நாடாளுமன்றத்துக்குள் எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நுழைந்ததிலிருந்து மக்களவை விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வி... மேலும் பார்க்க

பாஜக, காங்கிரஸுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: பிரசாரத்தில் அவதூறு பேச்சு; பதிலளிக்க உத்தரவு

ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் அவதூறு பேச்சுகள் குறித்த பரஸ்பர புகா... மேலும் பார்க்க

தொடா் விசாரணை வழக்குகள் புதன், வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படாது: உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் தொடா் விசாரணை வழக்குகள் விசாரிக்கப்படாது என்ற புதிய நடைமுறை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்ச... மேலும் பார்க்க