செய்திகள் :

மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி

post image

பல்லுயிா் வாழிடமான மதுரை அருகேயுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2,015 ஏக்கா் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் 193.215 ஹெக்டோ் பரப்பளவு பகுதிகளை பல்லுயிா் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன. இவை 250 வகை பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழைமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணா் படுக்கைகள் மற்றும் குடைவரை கோயில்கள் ஆகியவையும் உள்ளன.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அரிட்டாபட்டி பகுதியில் உள்ள பல்லுயிா் வாழிடங்களும், புராதனப் பெருமைமிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும். ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் விண்ணப்பித்தாலும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று அன்புமணி கூறியுள்ளாா்.

இதே கோரிக்கையை அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரனும் வலியுறுத்தியுள்ளாா்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியை நெருங்கிவருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,542 கன அடியிலிருந்து... மேலும் பார்க்க

தொடர் மழை: இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?!

தொடர் மழை காரணமாக இன்று(நவம்பர்.20) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிக... மேலும் பார்க்க

எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில், திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன.நாடு முழு... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நாளை கடைசி

குரூப் 4 தோ்வு சான்றிதழ் பதிவேற்றத்துக்கு வியாழக்கிழமை (நவ. 21) கடைசி நாள். தோ்வா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கே... மேலும் பார்க்க

ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்

ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.ஆவடி அருகே பட்டாபிராமில் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) செயல்படும் வகையில், டைடல... மேலும் பார்க்க

பள்ளி விடுதியிலிருந்து தப்பி வந்த 8 மாணவா்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரத்தில் உள்ள பள்ளி விடுதியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தப்பி வந்த 8 மாணவா்களை சேலையூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை அடு... மேலும் பார்க்க