செய்திகள் :

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு

post image

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற, தொல்லியல் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றேன்.

உலகிற்கே முன்னோடியாக தொழில்நுட்பம், கலை, இலக்கியம், சிற்பங்கள், கொடை, வீரம், ஐந்து வகை நிலப்பரப்புகள் என பண்டைய தமிழர்களின் வாழ்வு சிறந்து விளங்குவதையும், அதற்கு புறச்சான்றுகளாக கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் என பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் கிடைக்கப்பெற்ற தொல்பொருள்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தேன்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்டுள்ள தொல்லியல் துறை முன்னெடுப்புகள், 18ற்கும் மேற்பட்ட அகழ்வாராய்ச்சிகள், புதிய அருங்காட்சியகங்கள், 5300 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு தொழில்நுட்ப கால முடிவுகள் எனப் பலவற்றையும் விவரித்துப் பேசினேன்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம், தரங்கம்பாடி கோட்டை ஆகியவற்றில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி,ஒளி காட்சி அமைக்கப்படும், தமிழ்நாட்டின் தொன்மையையும் பண்டைய தமிழ்நாட்டு அரசியல் சமூக பொருளாதார வரலாற்றைப் பறைசாற்றக் கூடிய கல்வெட்டுக்களை காலவாரியாகத் தொகுத்து கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைக்கப்படும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 நினைவுச் சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு மகிழ்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டின் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருத்தண... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க