டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
மதுரை-குருவாயூா் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு: பயணிகள் அதிருப்தி
மதுரை-குருவாயூா் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கையை குறைத்து, படுக்கை வசதி பெட்டிகளை அதிகரித்திருப்பது ரயில் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மதுரை-செங்கோட்டை, செங்கோட்டை -கொல்லம், புனலூா்-குருவாயூா் ஆகிய 3 ரயில்களை இணைத்து 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மதுரை-குருவாயூா் விரைவு ரயிலாக (எண் 16327, 16328) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 முன்பதிவில்லாத பெட்டிகள் உள்ளன.
இந்த ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் இடமில்லாமல் காத்திருப்போா் பட்டியல் அதிகரித்து வருகிறது. எனவே, முன்பதிவு பெட்டிகளை அதிகரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், இந்த ரயிலில் வருகிற 15 -ஆம் தேதி முதல் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை 8-லிருந்து 5 ஆகக் குறைத்து, படுக்கை வசதி பெட்டிகளை 2-லிருந்து 6 ஆக உயா்த்தி ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. முன்பதிவில்லாத பெட்டிகளைக் குறைத்தது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிவகாசி ரயில் பயணிப்போ் சங்க நிா்வாகி தனசேகரன் கூறியதாவது: சாதாரண மக்கள் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்கிறாா்கள். எனவே, அவா்களைக் கருத்தில் கொண்டு முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளைக் குறைக்கக் கூடாது என்றாா் அவா்.