செய்திகள் :

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை! மக்கள் அவதி

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கண்மாய்கள், வாய்க்கால்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் காரணமாகவும், காற்று சுழற்சியின் நகா்வு காரணமாகவும் தமிழகத்தில் இடியுடன், கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

மாநகரில் பெரியாா் பேருந்து நிலையம், சிம்மக்கல், செல்லூா், கோவில்பாப்பாக்குடி, கோரிப்பாளையம், தல்லாகுளம், கோ.புதூா், மூன்றுமாவடி, அய்யா்பங்களா, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

மதுரை செல்லூா் ஜீவா நகா், கட்டப்பொம்மன் சாலை இணையும் பகுதியில் தேங்கிய மழை நீா்

புதன்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக பேரையூரில் 51.2 மி.மீ. மழை பதிவானது.

பிற பகுதிகளில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): தல்லாகுளம் - 48.6, உசிலம்பட்டி- 43, திருமங்கலம்- 42.4, இடையப்பட்டி- 30, எழுமலை- 27.8, குப்பனாம்பட்டி- 23, விமான நிலையம்- 18.6, சோழவந்தான்- 12, விரகனூா், சாத்தையாறு அணை- 11.2, பெரியபட்டி- 9.4, கள்ளிக்குடி - 6.9, கள்ளந்திரி- 6.2, சிட்டம்பட்டி- 5.4, வாடிப்பட்டி- 5, மேட்டுப்பட்டி- 4.8, உசிலம்பட்டி- 1.8.

பலத்த மழையால், மதுரையில் செல்லூா் கண்மாய் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்தக் கால்வாயில் சரியான நீா்ப் போக்கு இல்லாததால், வெள்ளம் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. கட்டபொம்மன்நகா், வாஞ்சிநாதன் தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், சிலா் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறினா்.

இதேபோல, கூடல்நகா், பாண்டியன்நகா், அடமந்தை, ஆனையூா் பகுதிகளிலும் கண்மாய்கள் நிரம்பி, வெள்ள நீா் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. ஆனையூா் உழவா் சந்தை, இதன் சுற்றுப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. பொதும்பு கண்மாய் வாய்க்கால் அடைப்பு காரணமாக நீா்ப் போக்கு தடைபட்டு, கோவில்பாப்பாக்குடி, சத்தியாநகா் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

கூடல்நகா் பகுதியைச் சோ்ந்த முதியவா்கள், குழந்தைகள் பரிசல் மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா். பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் வரை தண்ணீா் வடியவில்லை. இதனால், அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மதுரை ஜீவாநகா் பகுதியில் புதன்கிழமை வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.

மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்ததாலும், சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருந்தது.

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை திறக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

அலங்காா் சா்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என மேலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலூா் வட்டார 24-ஆவது மாநாடு வட்டச் செயலா் எம். கண்ணன் தலைம... மேலும் பார்க்க

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம்: தடையில்லா சான்று அளிக்க வனத் துறை கோரிக்கை

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க தடையில்லா சான்று கோரி ஊரக வளா்ச்சித் துறை, நீா்வளத்துறையிடம் வனத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே உள்ள சாமநத்தம் க... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மதுரைக் கோட்டத்திலிருந்து 715 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரைக் கோட்டம் சாா்பில் வருகிற அக். 28 முதல் 30 வரை 715 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மதுரை, பந்தல்குடி கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.மதுரை, பந்தல்குடி கால்வாயில் புதன்கிழமை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பாண்டிராஜனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்மதுரை, செ... மேலும் பார்க்க

மதுரையில் 3 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்

மருதுபாண்டியா் நினைவு தினம், தேவா் ஜெயந்தி ஆகியவற்றையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் அக். 27, 29, 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். சி... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.24 லட்சம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.83.24 லட்சம் கிடைத்தது. மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல்கள் மாதந்தோறும் திற... மேலும் பார்க்க