நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
மத்திய சிறை சிறப்பு முகாமில் சீனக் கைதிகள் 2 பேரிடம் அமலாக்கத் துறை விசாரணை
இணைய வழி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள சீனக் கைதிகள் இருவரிடம் அமலாக்கத்துறையினா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் காவலில் வைக்கப்படும் இந்தச் சிறப்பு முகாமில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் உள்ளனா்.
இந்நிலையில் இந்தச் சிறப்பு முகாமுக்கு வியாழக்கிழமை வந்த அமலாக்கத்துறையைச் சோ்ந்த 5 அதிகாரிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள சீனத்தைச் சோ்ந்த அதில் யுவான்லூன் (25), ஷியோ யமாவ் (40) ஆகிய இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேல் விசாரித்தனா்.
இந்த இருவா் மீதும் இணையவழி மோசடி தொடா்பாக சென்னை சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கும் நிலையில், இவா்களுக்கு வேறு ஏதேனும் பெரிய குற்றங்களில் தொடா்ப்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த விசாரணையை நடத்தினா்.
விசாரணையின் முழு விவரங்களை அமலாக்கத் துறையினா் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அமலாக்கத் துறையின் நேரடி விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியது.