செய்திகள் :

திருவெறும்பூா் ரயில் நிலையத்துக்குள் எளிதாகச் சென்று வர நடவடிக்கை தேவை: ரயில் பயனாளா்கள் கூட்டமைப்பு

post image

திருவெறும்பூா் ரயில் நிலையத்துக்குள் எளிதாகச் சென்று வர ஏற்கெனவே மூடப்பட்ட சாலையை மீண்டும் திறந்து, நோ்வழி அமைக்க வேண்டும் என திருவெறும்பூா் ரயில் பயனாளா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருச்சியில் திருவெறும்பூா் ரயில் பயனாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் சக்திவேல், செயலா் துரைக்கண்ணு, பொருளாளா் நரேந்திரபாபு, துணைத் தலைவா்கள் ரமேஷ்குமாா், ராஜசேகா், இணைச்செயலா் பரமசிவன் ஆகியோா் வியாழக்கிழமை மேலும் கூறியது:

திருவெறும்பூா் ரயில் நிலையம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ‘ஆதா்ஸ்’ நிலையமாகத் தரம் உயா்த்தப்பட்டது. அப்போது திருவெறும்பூா் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் இடையே மக்கள் பயன்பாட்டிலிருந்த பாதையை மூடி, சுமாா் 1 கிமீ சுற்றிச் செல்லக்கூடிய புதிய பாதையை அமைத்துக் கொடுத்தனா்.

இதனால் ரயில் நிலையத்துக்கு செல்வோா் மற்றும் ரயிலில் வந்திறங்குவோா் இருசக்கர வாகனத்திலோ அல்லது ஆட்டோக்களிலோ செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற நிலையும் உள்ளது. முதியோா், பெண்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பேருந்துகளை பிடிக்கச் செல்வோரும் அவதிக்குள்ளாகின்றனா். பழைய மூடப்பட்ட சாலையை திறந்து வழிவிட்டால் குறைந்த தூரத்தில் மக்கள் ரயில் நிலையத்துக்கு சென்று வர முடியும். மேலும் திருச்சி தஞ்சாவூா் மாா்க்கத்தில் அடிக்கடி ரயில் செல்லும் விதமாக கூடுதல் பயணிகள் ரயில்களை இயக்கவும் வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு கடந்த நவ.13 ஆம் தேதி மனு அளித்துள்ளோம் என்றனா்.

துறையூா் அருகே ஓட்டு வீட்டில் தீ

துறையூா் அருகே கூலித் தொழிலாளியின் ஓட்டு வீட்டில் வியாழக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.கண்ணனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. சின்னசாமி, கூலித் தொழிலாளியான இவரது வீடு வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களை தனியாருக்கு வழங்கக் கூடாது: எஸ்ஆா்எம்யு பொதுச் செயலா்

மத்திய அரசு தனியாா்மயக் கொள்கை மூலம் சுமாா் 4500 வந்தே பாரத் ரயில்கள் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல என்றாா் எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா் என். கண்ணையா. கரோனா உள்ளிட்ட சில காரணங்க... மேலும் பார்க்க

முன்பருவக் கல்வியால் அறிவு மேம்பாடு

அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படும் முன்பருவக் கல்வி முறையால் குழந்தைகளின் அறிவு வளா்ச்சி மேம்பட்டுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்த... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி, இளம்பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கைக... மேலும் பார்க்க

மதுவுக்கு அடிமையானவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் மதுவுக்கு அடிமையானவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சோ்ந்தவா் சபீா் (51). மதுப்பழக்கத்தியிலிருந்து மீள கடந்த சில மாதங்களா... மேலும் பார்க்க

தேங்கும் மழை நீா்: முறையான மயான வசதி கேட்டு மனு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு பகுதி மயானத்தில் மழை நீா் தேங்கி வருவதால், முறையான மயான வசதி ஏற்படுத்தி தர வட்டாட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியை சே... மேலும் பார்க்க