செய்திகள் :

மத்திய வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்த நேபாள எம்.பிகள்!

post image

தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர்.

நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவிலான, அந்நாட்டின் எம்.பிகள் இந்தியா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தலைநகர் தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை அவர்கள் இன்று (ஜூலை 30) நேரில் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையிலான பன்முகத் துறைகளின் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேபாள அனைத்துக் கட்சிக் குழுவுடனான, இந்தச் சந்திப்பானது அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலியின் இந்தியப் பயணத்துக்கு முன்னதாக அமைந்துள்ளது.

கடந்த, ஜூலை 27 ஆம் தேதியன்று, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம், பிரதமர் ஒலி, வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா

An all-party delegation from Nepal met Union Foreign Secretary Vikram Misri in person in Delhi.

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் தலைமையில் நேற்... மேலும் பார்க்க

மக்களவைத் தேர்தல் மோசடி: 6.5 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் போலி வாக்காளர்கள்! - ராகுல்

போலி வாக்காளர்கள் மூலம் மோசடி செய்து மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ... மேலும் பார்க்க

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அங்கு சுமார் ரூ. 2,183.45 கோடி மதிப்பிலான 52 மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடி... மேலும் பார்க்க

தலையிலிருந்த பெரிய பை விழுந்ததே தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலுக்குக் காரணம்: அஸ்வினி வைஷ்ணவ்

புது தில்லி: ஒரு பயணியின் தலையில் இருந்த மிகப்பெரிய மூட்டை பிற பயணிகள் மீது விழுந்ததன் தொடர்ச்சியாகவே, பிப். 15 தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் நேரிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ... மேலும் பார்க்க

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க