"இந்திராகாந்தி - பண்டாரநாயக்கா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த லாயக்கற்ற பாஜக அரசு" ...
மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு
மனிதர்களை இரண்டாவது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக, ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெருநாய்கள், மனிதர்களை இரண்டாவது முறை கடித்தால், அந்த நாய்கள் ஆயுள் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருநாய்கள் முதல்முறையாக மனிதரை கடித்தால், அந்த நாய்களை 10 நாள்கள் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டு, கருத்தடை செய்து பின்னர் விடுவிக்கப்படும். தொடர்ந்து, நாய்களுக்கு மைக்ரோ சிப்பும் பொருத்தப்படும்.
மீண்டும், அந்த நாய்கள் மனிதர்களை இரண்டாவது முறையாக கடித்தால், ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்குப் பிறகும் யாரவது தெருநாய்களைத் தத்தெடுக்க வேண்டுமென்றால், ’இனி நாய்களை தெருவில் விடமாட்டோம்’ என்று தெரிவித்து பிரமாணப் பத்திரம் ஒன்றை சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த புதிய முயற்சியை உத்தரப் பிரதேச அரசு எடுத்துள்ளது.
இதையும் படிக்க: மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!