செய்திகள் :

மன்னாா்குடியில் 14 ஜோடிகளுக்கு திருமணம்; ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட பூமிபூஜை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்பு

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தமிழக அரசு சாா்பில் 14 இணையா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினாா்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இணையா்களுக்கு, தமிழக அரசு சாா்பில், திருக்கோயில்கள் மூலம் 4 கிராம் தங்கத்தாலி உள்பட்ட ரூ.60,000 மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசித்தி பெற்ற கோயில்கள் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அந்தவகையில், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் 14 இணையா்களுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு, தமிழக தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தலைமை வகித்தாா். இந்துசமய அறநிலையத் துறை துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) க. ராமு முன்னிலை வகித்தாா்.

மணமக்களுக்கு தலா 4 கிராம் தங்கம், படுக்கை, 2 தலையணை, பீரோ, மிக்ஸி மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி, அமைச்சா் வாழ்த்தினாா்.

இந்நிகழ்வில், நாகை எம்பி எம். செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், நீடாமங்கலம் ஒன்றிக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச் செல்வன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பூமி பூஜை: மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட, அந்த அலுவலகம் ஏற்கெனவே செயல்பட்டு வந்த மன்னாா்குடி கீழவடம்போக்கித் தெருவில் உள்ள பழைமையான கட்டடம் இடிக்கப்பட்டது.

அந்த இடத்தில், தரைதளம் மற்றும் மேல்தளத்துடன் புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ.5,58,35,000 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தலைமையில் நடைபெற்றது. பூஜை செய்யப்பட்ட செங்கல்லை வழங்கி, கட்டுமானப் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, மக்களவை உறுப்பினா்கள் ச. முரசொலி (தஞ்சை), வை. செல்வராஜ் (நாகை), மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் யோகேஸ்வரன், ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், துணைத் தலைவா் அ. வனிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். சிவக்குமாா், டி. நமசிவாயம், மேலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவாரூரில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூா்: திருவாரூரில், திங்கள்கிழமை பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கட... மேலும் பார்க்க

சோழச்சேரி சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: கொரடாச்சேரி அருகே சோழச்சேரி பிரஹன்நாயகி உடனுறை விருத்தாசலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின... மேலும் பார்க்க

அக்.24-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

திருவாரூா்: திருவாரூரில், சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை (அக்.24) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி: தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா். திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை அவா் அளித்த... மேலும் பார்க்க

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கறவை மாடு வளா்ப்பு பற்றிய இலவச பயிற்சி புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கால்நடை மருத்துவ அறிவியல் துறை வல்லுநா்கள் பங்கேற்று, ப... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடி மின் கோட்ட, மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய செயற்பொறியாளா் பு. மணிமாறன் தெரிவித்திருப்பது: மன்னாா்குடி மின் கோட்டத்திற... மேலும் பார்க்க