செய்திகள் :

'மயூரா ஜெயக்குமார் vs கோவை செல்வன்' - விமான நிலையத்தில் மோதிய காங்கிரஸ் கோஷ்டிகள்; நடந்தது என்ன?

post image

கோவை காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக உள்கட்சி பிரச்னை உச்சத்தில் உள்ளது. தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும், கோவை அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

மயூரா ஜெயக்குமார்

அங்குதான் பிரச்னை வெடித்தது. மாவட்டத் தலைவர்கள் மனோகரன், பகவதி மற்றும் மாநில பொறுப்பில் உள்ள பலர் ஜெயக்குமாரின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தனர்.

“மயூரா ஜெயக்குமார் கட்சியை மோசமாக்கிவிட்டார். தன் உதவியாளர் கருப்பசாமி என்பவரை மாநகர மாவட்ட தலைவராக்கியுள்ளார். அவரது செயலால் காங்கிரஸ் கட்சி கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

காங்கிரஸ் மோதல்

எனவே, மயூரா ஜெயக்குமாரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் கோவையில் காங்கிரஸ் கட்சி வளரும்.” என்று தீர்மானமும் நிறைவேற்றினர்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால். நேற்று (நவம்பர் 17) கோவை விமான நிலையம் வந்தார்.

கோவை காங்கிரஸ்

அவரை வரவேற்பதற்காக மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஐ.என்.டி.யூ.சி தலைவர் கோவை செல்வன் தரப்பில் ஒரு கோஷ்டியும் என இரண்டு கோஷ்டிகளாகச் சென்றிருந்தார்கள். வேணுகோபாலிடம் இரண்டு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறியுள்ளனர்.

வேணுகோபாலை வழியனுப்பி, விமான நிலையத்திற்கு வெளியே வந்தப்பிறகு இரண்டு தரப்பும் மீண்டும் மோதியுள்ளது. வாக்குவாதம் முற்றி, இரண்டு தரப்பிலும் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டு, மோதலில் ஈடுபட முயற்சித்தனர்.

காங்கிரஸ் மோதல்

அப்போது பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Kasthuri: "கஸ்தூரி என்ன தீவிரவாதியா?" - தமிழிசை சௌந்தரராஜன் சொல்வதென்ன?

கஸ்தூரியை ஒரு தீவிரவாதி போன்று காவல்துறையினர் நடத்துவது சரியானது அல்ல எனப் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.சமீபத்தில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து... மேலும் பார்க்க

`கூட்டத்துக்கு வந்தால் இலவச நாற்காலி' வித்தியாசமாக ஆள் சேர்த்த அதிமுக நிர்வாகி-வைரலாகும் வீடியோ

கொள்கைக்காக கூட்டம் சேர்ந்த காலம்போய் தற்போது இலவசத்துக்கும், பணத்துக்கும் பரிசுப் பொருள்களுக்கும் கூட்டம் சேரும் நிலை வந்துவிட்டது. இதை பல அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பார்த்ததுண்டு. அரசியல் கட்சி... மேலும் பார்க்க

RSS கோட்டையில் ரோடு ஷோ: கறுப்புக்கொடி காட்டிய பாஜக-வினருக்கு பிரியங்கா காந்தி பதிலடி

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு நாள்கள் தீவிரமாக பிரசாரம் செய்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூரில் ரோடு ஷோ நடத்தினார். மக்கள் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `மீண்டும் ஒரு வாய்ப்பு..!’ - 50 ஆண்டு செல்வாக்கை மீட்பாரா அசோக் சவான்?

நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பல தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது.இத்தேர்தலில் பல அரசியல் வாரிசுகள் களம் காண்கின்றனர். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு ... மேலும் பார்க்க

Seeman: ``திமுக-வினருக்கு எந்த ரெய்டும் வராது; காரணம் கப்பம்..!" - சீமான் காட்டம்

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 - வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி... மேலும் பார்க்க