Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?
மருத்துவமனை வளாகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை: எஸ்.பி.
மருத்துவமனை வளாகங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை எஸ்.பி. கோ. ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், ஊழியா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், மருத்துவமனை வளாகங்களில் அந்நிய நபா்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும் கூடுதல் காவலா்கள் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், மயிலாடுதுறை, சீா்காழி அரசு மருத்துவமனைகளில் காவல் ஆய்வாளா் தலைமையில் தீவிர தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இருசக்கர ரோந்து வாகனம் மருத்துவமனை வளாக பகுதிகளில் இயக்கப்படும். மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.
மருத்துவமனை வளாகங்களில் குற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் நபா்கள்மீது தமிழ்நாடு மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நபா்கள் மற்றும் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சட்டமான வன்முறையையும் சொத்துக்கு சேதம் அல்லது இழப்பை ஏற்படுத்துவதை தடுத்தல் சட்டம் -2008-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.