நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? ப. சிதம்பரம் கேள்வி
மழையால் விளைச்சல் பாதிப்பு; விவசாயி தற்கொலை
முத்துப்பேட்டை அருகே பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிா் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், விவசாயி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
முத்துப்பேட்டை வட்டம் உப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முனியப்பன் (55). இவா் 2.5 ஏக்கா் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தாா். அண்மையில் பெய்த பருவம் தவறி பெய்த மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிா்கள் வயலில் சாய்ந்தன. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டதால் முனியப்பன் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா். அவரை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].