செய்திகள் :

”மழை, பனியால் பாதிக்கப்படும் நெல், ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தபடுமா?”- மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு

post image

டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கன மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்ததில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை காட்டி மீண்டும் வெள்ள சேதம் குறித்து கணக்கெடுக்கவும் கோரிக்கை வைத்தனர். இதே போல் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், அறுவடை செய்யும் நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகமிருப்பதாகவும், கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதிகாரிகளிடம் விளக்கும் விவசாயிகள்

இந்நிலையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை தளர்வு செய்து 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு, தமிழக அரசு சார்பில், கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் நெற்பயிர்களை ஆய்வு செய்வதற்கு குழு அறிவிக்கப்பட்டது. இதில், மத்திய உணவுத்துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள் நவீன், பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் கொண்ட குழுவுடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட தமிழக அரசின் அதிகாரிகளும் ஆய்வில் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுக்கோட்டை, அரியலுார், திருச்சி மாவட்டங்களில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் ஈரப்பதம் உடைய நெல்லை அதிகாரிகளிடத்தில் காட்டினர். மேலும் நெற்கதிர்களையும் கொண்டு வந்து காட்டினர். கொள்முதலுக்காக வந்துள்ள நெல்லையும் மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு செய்து சேகரித்தனர். அப்போது விவசாயிகள் மழை மற்றும் பனி பொழிவால் நெல் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே கொள்முதலில் ஈரப்பதத்தின் அளவை உயர்த்த வேண்டும் என்றனர்.

நெல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை கூறும் போது, ``தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசு டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில், மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், கொள்முதலில் ஈரப்பதத்தை அதிகரிப்பது தொடர்பாக, மத்திய நிபுணர்கள் குழு ஆய்வு செய்கின்றனர். சீதோசன நிலை 17 சதவீதத்திற்கு குறைவாகவும் நெல்லை வழங்க விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆனால் ஜனவரியில், மழை மற்றும் பனிப்பொழிவு போன்ற சீதோசன நிலையால், 22 சதவீதம் நெல்லை கொள்முதல் செய்ய நிபுணர் குழுவிடம் விவசாயிகள் கேட்டுள்ளனர்.

விவசாயிகளின் கருத்துக்களை ஏற்று, மத்திய அரசின் அறிக்கை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். அரசு சார்பிலும் மழையால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்துள்ளோம். 80 நெல் மாதிரிகளை சேகரித்து, பரிசோதிக்க உள்ளனர். நெல் பழம் நோய் குறித்து, தமிழ்நாடு வேளாண் கல்லூரியை சேர்ந்த 4 பேர் ஆய்வு செய்கின்றனர். 5 லட்சத்து 76 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இதுவரை தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

முருங்கை பவுடர், கேப்சூல்,தேநீர்; லாபத்துக்கு வழிகாட்டும் முருங்கை சாகுபடி, மதிப்புக்கூட்டல் பயிற்சி

மதிப்புக்கூட்டல் என்பது விவசாயத்தின் ஓர் அம்சமாக இருந்துவருகிறது. காரணம், மதிப்புக்கூட்டினால் அந்தப் பொருளின் வாழ்நாள் அதிகம், கூடுதல் விலைக்கு விற்கலாம், விளைபொருள்களின் சேதத்தைக் குறைக்கலாம் எனப் பல... மேலும் பார்க்க

பொங்கல்: 'எங்க ஊரு கரும்பு ருசியே தனி ரகம் தான்!' - ரகசியம் சொல்லும் விருதுநகர் விவசாயிகள்

பொங்கல் பண்டிகை என்றதும் பொங்கல் சுவையோடு சேர்த்து கரும்பின் தித்திப்பும் நாக்கில் சட்டென வந்து போகும். அதுவும் சில ஊர்களில் விளையும் கரும்புகளின் சுவை தனி ரகம். அப்படியான ஒன்றுதான் விருதுநகர் மாவட்டம... மேலும் பார்க்க

வண்ணவண்ண பானைகள்; கொத்துக்கொத்தாய் மஞ்சள், கரும்பு... ஈரோட்டில் களைகட்டிய பொங்கல் விற்பனை! - Album

பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்... மேலும் பார்க்க

`முல்லைப்பெரியாறு அணை உரிமைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!' - தமிழக விவசாயிகள் முடிவு

முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்திருப்பதாகவும் அதனால் நீர்மட்டத்தை 120 அடிக்கும் குறைவாக்க வேண்டும் எனக் கோரி கேரளாவைச் சேர்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது ப... மேலும் பார்க்க

`இரண்டு ரூபாய் தினக்கூலி டு 9 ஏக்கர் விவசாயி’ - `பத்மஸ்ரீ' அஸ்ஸாம் விவசாயி சாதித்த கதை

அனைவருக்கும் சாப்பாடு போடும் விவசாயம், மக்களின் விருப்பமான தொழிலாக இல்லாமல் இருக்கிறது. அஸ்ஸாமில் ஒரு கூலித்தொழிலாளி விவசாயத்தை ஆர்வத்துடன் செய்து அதில் சாதித்து இருக்கிறார். அஸ்ஸாமில் உள்ள சிராக் மாவ... மேலும் பார்க்க

"வெங்காயத்திற்கு நல்ல விலை அல்லது திருமணம் செய்ய எனக்குப் பெண்" - மகா. முதல்வரிடம் விவசாயி கோரிக்கை

நாட்டில் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா விளங்குகிறது. தொழில்துறை மட்டுமல்லாது விவசாயத்திலும் மகாராஷ்டிரா சிறந்து விளங்குகிறது. காய்கறிகள், பழங்கள் மகாராஷ்டிராவில் அத... மேலும் பார்க்க