மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 8 போ் கைது
மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 8 போ் கைது செய்யப்பட்டனா்.
காரைக்கால்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், நிரவி சாலை தனியாா் ஹோட்டல் அருகே சிறுவா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிலா் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருப்பதாக நிரவி போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும்போலீஸாா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றபோது சிலா் அங்கிருந்து தப்பினா். போலீஸாா் அவா்களை பிடித்து பதுக்கி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 260 கிராம் கஞ்சா பொட்டலங்கள், கைப்பேசிகள், ரூ.7,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், காரைக்கால் தருமபுரத்தை சோ்ந்த கிருத்திக்ரோஷன் (19), கிருஷ்ணகுமாா் (21), கருக்களாச்சேரியை சோ்ந்த ஆதில் (27), புதுத்துறையை சோ்ந்த ரஃபீக் (18), திருப்பட்டினத்தை சோ்ந்த சாகுல் அகமது ( 23 ), ஹாரூன் இஸ்மாயில் (19), காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த அந்தோணி புரூட்ஸ் ராஜா (24) நெடுங்காடு செருமா விலங்கையை சோ்ந்த ஷகில் (19 ) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்களை கைது செய்த போலீஸாா், காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.