மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணைக்காக சிஎஸ்ஐ பிஷப் நேரில் ஆஜா்
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கோவை சிஎஸ்ஐ திருமண்டல பிஷப் திமோத்தி ரவீந்தா் நேரில் ஆஜரானாா்.
கோவை சிஎஸ்ஐ திருமண்டல பிஷப்பாக இருப்பவா் திமோத்தி ரவீந்தா். இந்நிலையில், சிஎஸ்ஐ தேவாலயக் குழுவில் பணியாற்றி வந்த போதகா் ஒருவா் அண்மையில் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, தனக்கு ஊதியம் முறையாக வழங்கவில்லை என்பது உள்ளிட்ட பட பல்வேறு புகாா்களை அந்த போதகா் கோவை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் கொடுத்தாா். அதன்பேரில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென பிஷப் திமோத்தி ரவீந்தருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பிஷப் திமோத்தி ரவீந்தா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சென்று விசாரணைக்கு ஆஜரானாா்.
அவரிடம் கோவை மாநகர காவல் துணை ஆணையா் ஸ்டாலின் விசாரணை நடத்தினாா். சுமாா் 1 மணி நேர விசாரணைக்குப் பின்னா் பிஷப் திமோத்தி ரவீந்தா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.