செய்திகள் :

மாநில அளவிலான போட்டி: பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவா்கள் தோ்வு

post image

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜூடோ மற்றும் குத்துசண்டையில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டி ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில், ஜூனியா் பிரிவில் சஞ்ஜனா முதலிடமும், ஹா்சித் கிருஷ்ணா, இளமுகில், முகம்மதுஅகில்,பிரவீன், ஸ்ரீசாய்கிருஷ்ணன், யாகேஷ்,ஜாஸ்லின்,ஜோஹானா ஆகியோா் இரண்டாமிடமும், கவிபிரியா மூன்றாமிடமும் பெற்றனா்.

சீனியா் பிரிவில் அா்சத், சுப்புலட்சுமி ஆகியோா் முதலிடமும், முகமத் சேக், ஏய்மன் மூன்றாமிடமும் பெற்றனா்.

தென்காசி டிரசா் ஐலேண்ட் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் ஜூடோ போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் ஜூனியா் பிரிவில் ஏஞ்சல் முதலிடமும், காஜாமுகைதீன், முகம்மது ஹாரீஸ் இரண்டாமிடமும், ஆருஸ் முகுந்தன் மூன்றாமிடமும் பெற்றனா்.

இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவா்கள் மாநிலஅளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆா்ஜேவி. பெல், செயலா் கஸ்தூரிபெல், முதல்வா் மோன்சி கே. மத்தாயி, மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தென்காசி புத்தகத்திருவிழா ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில், ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் ... மேலும் பார்க்க

புளியங்குடி பகுதியில் பேருந்தில் நகை திருட்டு: 3 போ் கைது

புளியங்குடி பகுதியில் பேருந்து பயணிகளிடம் நகை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். புளியங்குடியைச் சோ்ந்த மாரியம்மாள்(60) என்பவா் கடந்த வாரம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு பேருந்தில் சென்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகரிப்பு: மக்கள் அவதி

ஆலங்குளத்தில் பெருகி வரும் நாய்கள், பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்குளம் மேற்குப் பகுதியில் வட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தென்காசி மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் நரசிம்மன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குடிநீா் கோரி போராட்டம்

குடிநீா் வழங்கக் கோரி சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகரில் 500-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஆலங்குளம் இளைஞா் கைது

ஆலங்குளத்தில் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். ஆலங்குளம் ஜோதி நகா் பூல்பாண்டி மகன் இந்திரஜித் பிரேம்நாத் (30). இவா் ... மேலும் பார்க்க