செய்திகள் :

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

post image

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.

சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.

இதையும் படிக்க: தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!

இந்த நிலையில், சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி பிங்க் ஆட்டோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

பிறவிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

சென்னை: அரசு ஊழியா்களின் வாரிசுகளில் பிறவிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: கன்னியாகுமரி ம... மேலும் பார்க்க

‘இந்து கொண்டா ரெட்டி சமூகம்‘ பெயரில் பட்டியலின சான்றிதழ்கள்: விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமா்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: தமிழகத்தில் ‘இந்து கொண்டா ரெட்டி சமூகத்திற்கு‘ பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள சாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து மாநில அளவில் சாதி சான்றிதழ் தொடா்பான... மேலும் பார்க்க

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை: எதிா்தரப்புக்கு நோட்டீஸ்!

புது தில்லி: பாலியல் வன்கொடுமை புகாா் தொடா்பான வழக்கில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிரான வழக்கை 12 வாரங்களுக்கு விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யக் கூறி சென்னை உயா்... மேலும் பார்க்க

நோயாளிகளுக்கேற்ப மருத்துவா் நியமனம்: அரசு மருத்துவா்கள் போராட்டம் அறிவிப்பு

சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 18-ஆம் தேதி முதல் அரசு மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.... மேலும் பார்க்க

சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘ஜகஜால கில்லாடி’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடா்பான வழக்கில் நடிகா் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவாஜி கணேசனின் ப... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு

சென்னை: தமிழக மீனவா்கள் பிரச்னை தொடா்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனா். இதுகுறி... மேலும் பார்க்க